Load Image
Advertisement

குமரன் வணிக வளாகத்தில் சுகாதார சீர்கேடு: வணிகர்கள், பொதுமக்களுக்கு பெரும்கேடு

 Unsanitary conditions in Kumaran shopping mall, traders, public disaster    குமரன் வணிக வளாகத்தில் சுகாதார சீர்கேடு: வணிகர்கள், பொதுமக்களுக்கு பெரும்கேடு
ADVERTISEMENT
திருப்பூர்:திருப்பூரில் மாநகராட்சி குமரன் வணிக வளாகத்தை முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தால், சிதிலமடைந்து, வளாகம் முழுவதும் சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு வணிக வளாகங்கள் உள்ளன. இந்த வளாகங்கள் வாயிலாக, மாநகராட்சிக்கு வருவாய் ஏற்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட வணிக வளாகங்களை மாநகராட்சி தரப்பில் முறையாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதாக, பல ஆண்டுகளாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

அவ்வகையில், குமரன் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அருகே அமைந்துள்ளது குமரன் வணிக வளாகம். இரண்டு தளங்களுடன் செயல்பட்டு வருகிறது. 30 கடைகள் உள்ளன. அரசு துறை அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும் இயங்கி வருகிறது. அதே வளாகத்தின் ஒரு பகுதியில் அம்மா உணவகம் உள்ளது.

பிரதான பகுதியில் மக்கள் பார்வையில் உள்ள குமரன் வணிக வளாகம் கடந்த சில மாதங்களாக உரிய பராமரிப்பின்றி, சுகாதார சீர்கேடாக காட்சியளிப்பது வேதனையான ஒன்று. குறிப்பாக, கட்டடத்தின் சுவர்கள் மற்றும் மேல் தளத்தில் ஏராளமான இடங்களில் செடிகள் முளைத்து பெரிய அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், சுவர்கள் பலமிழந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழ காத்திருக்கிறது.

வெளியேறும் கழிவு நீர்



வளாகத்தில் உள்ள கழிப்பறையின் செப்டிக் டேங்கை முறையாக சுத்தம் செய்து பராமரிக்காத காரணத்தால், அதிலிருந்து கழிவு நீர் பொங்கி கடும் துர்நாற்றத்துடன் வெளியேறி வருகிறது. கழிப்பிடம் உரிய வகையில் சுத்தம் செய்யப்படாமல் சுகாதார சீர்கேடாக, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

அம்மா உணவகம் முன் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதுபோல் பல்வேறு பிரச்னைகள் வளாகத்தில் உள்ளது. அங்குள்ள அலுவலகத்தில் பணியாற்றுவோர், கடை உரிமையாளர் பெரும் அவதியும், அச்சத்துடனும் வந்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டி தரக்கூடிய வணிக வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதும், வணிகர்களின் பிரச்னைகளை தீர்க்க செவி சாய்க்காமல் இருப்பதும் அதிர்ச்சியாக உள்ளது



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement