Load Image
Advertisement

இன்னும் எத்தனை மனு தான் கொடுப்பது? சக்தி நகர் பெண்கள் சக்தியாக மாறி கேள்வி

 How many more petitions to give? Shakti Nagar women become Shakti and ask    இன்னும் எத்தனை மனு தான் கொடுப்பது? சக்தி நகர் பெண்கள் சக்தியாக மாறி கேள்வி
ADVERTISEMENT
பல்லடம்:பல்லடம் நகராட்சி, 6வது ஆண்டுக்கு உட்பட்ட கரையாம்புதுார் - சக்தி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் பொதுமக்கள், அடிப்படை வசதி கேட்டு நேற்று முன்தினம், பல்லடம் நகராட்சியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி தலைவர் இல்லாததால், நேற்று மீண்டும் நகராட்சி அலுவலகத்துக்கு படையெடுத்தனர்.

இது குறித்து சக்தி நகர் பெண்கள் கூறியதாவது:

மழை நீர் வடிகால் அமைத்து தருவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், அதன்பின் யாருமே எங்கள் பகுதிக்கு வரவில்லை. சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகிறோம். வீடுதோறும் கழிவு நீர் தேங்கி நிற்பதால், பாம்பு, தேள் வருகின்றன.

இதனால், குழந்தைகளை வெளியே அனுப்பவே அச்சமாக உள்ளது. மூன்று ஆண்டில் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்துள்ளோம். இன்னும் எத்தனை மனுக்கள் கொடுப்பது. மனுவை வாங்கி வாங்கி உள்ளே வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால், நடவடிக்கை மட்டும் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுமக்களிடம் பேசிய கமிஷனர் முத்துசாமி, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். 'இப்படித்தான் ஒவ்வொரு முறையும் கூறுகிறீர்கள். இம்முறை, கட்டாயமாக எங்களுக்கு மழை நீர் வடிகால், தெருவிளக்கு வசதி அமைத்து தர வேண்டும். 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலை மறியல் செய்வோம்,' என கூறி, மக்கள் கலைந்து சென்றனர்.

-------------------------

அடிப்படை வசதிகளை செய்து தரக்கேட்டு, பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய சக்தி நகர் பெண்கள்.

வார்டு கவுன்சிலர் புலம்பல்

6வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தி (காங்.,) கூறுகையில், ''ஓட்டு போட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுத்த பின், வார்டு பகுதியில் எந்த வேலையும் நடக்கவில்லை என, பொதுமக்கள் என்னிடம் கேட்கின்றனர். நான் என்ன பதில் கூறுவது? நகராட்சி கூட்டத்திலும் பலமுறை இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற மனு அளித்துள்ளேன். பொதுமக்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை,'' என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement