Load Image
Advertisement

மயானத்தில் புகை போக்கி டமார் கிணற்றில் போட்ட கல்லாக பணி

 Work as a stone placed in the Damar well by smoking in the cemetery    மயானத்தில் புகை போக்கி டமார் கிணற்றில் போட்ட கல்லாக பணி
ADVERTISEMENT
அவிநாசி;அவிநாசியில் உள்ள எரிவாயு மயானத்தில் புகை போக்கி உடைந்து விழுந்ததை தொடர்ந்து, புதியது வைக்க நிதி ஒதுக்கியும், பணிகள் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

அவிநாசி பேரூராட்சி, 18 வார்டுகளை உள்ளடக்கியது. அப்பகுதி மக்கள் இறப்பு இறுதி சடங்கை மேற்கொள்ளும் வகையில், அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் பின், கடந்த, 2015ம் ஆண்டு முதல் மின் மயானம் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மயானத்தில் உள்ள புகை போக்கியை முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தினால் கடந்த ஜூன் மாதம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையில், 100 அடி அளவில் உள்ள புகை போக்கியானது உடைந்து விழுந்தது. தற்போது, 60 அடி உயரம் மட்டுமே உள்ளது.

இதனால், இறந்தவர்களை எரியூட்டும் போது, வெளிவரும் புகையால், அருகே உள்ள குடியிருப்புகளில் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக மக்களின் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால், புதிய புகை போக்கி அமைக்க, 11 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி (பொறுப்பு) கூறுகையில், ''புகை போக்கியை மாற்ற நிர்வாக ஒப்புதல் வந்துள்ளது. பணிகள் டெண்டர் விடப்பட்டு துவங்கப்படும். இளநிலை பொறியாளர் ராஜவேல், நாலைந்து பேரூராட்சிக்கு பொறுப்பில் உள்ளதால் வாரம் ஒரு முறை மட்டுமே வந்து செல்கிறார்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement