Load Image
Advertisement

ஜெயலலிதா இறந்ததும் தி.மு.க.,வுக்கு தாவ 4௦ எம்.எல்.ஏ.,க்கள் தயாராக இருந்தனர்

 When Jayalalitha died, more than 40 MLAs were ready to join the DMK    ஜெயலலிதா இறந்ததும் தி.மு.க.,வுக்கு தாவ  4௦ எம்.எல்.ஏ.,க்கள் தயாராக இருந்தனர்
ADVERTISEMENT
'அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்த்து விட்டு, தி.மு.க., ஆட்சியை ஏற்படுத்த அ.தி.மு.க.,வின், 40 எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க., பக்கம் வரத் தயாராக இருந்தனர்' என, தமிழக சபாநாயகர் அப்பாவு பேசினார்.


சென்னை அடையாறில், நேற்று நடந்த தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் எப்போதும் கொள்கை பிடிப்பும், லட்சியமும் உடையவர். அதைப்பார்த்து பலமுறை பிரமித்திருக்கிறேன். அவர் லட்சியத்தோடு செயல்பட்டார் என்பதற்கு, உதாரணமாக ரகசிய தகவல் ஒன்றை சொல்கிறேன்.



கடந்த, 2016ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததும், அ.தி.மு.க., பிளவுபட்டது. 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவி இழந்தனர். அந்த நேரத்தில் தான், டி.டி.வி.தினகரன் சிறைக்கு சென்றார்.

அப்போது, அரசியலில் இருக்கும் நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அ.தி.மு.க.,வில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர், தி.மு.க.,வுக்கு வரத் தயாராக இருக்கின்றனர். அவர்களிடம் பேசிடலாமா என்று கேட்டார்.
தலைவர் ஸ்டாலினிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு, தலைவரை தொடர்பு கொண்டேன். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டவர், 'அந்த 40 பேரை வைத்து, தி.மு.க., ஆட்சி அமைக்கலாம்
என திட்டம் போட்டுத்தானே, இதை என்னிடம் சொல்கிறீர்கள். அப்படியொரு நினைப்பு இருந்தால், மறந்து விடுங்கள். நான் மக்களை நம்புகிறேன்; அவர்கள் நமக்கு ஓட்டளித்து, ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்தால், அதை ஏற்போம்' என்றார். இப்படி லட்சியத்தோடு செயல்படுகிறவர் தான் முதல்வர்.இவ்வாறு அவர் பேசினார்.- நமது நிருபர் -


வாசகர் கருத்து (40)

  • SIVA - chennai,இந்தியா

    இவர்கள் இப்படி எல்லாம் பேசுவதற்கு காரணம் ஆர் எஸ் பி மாடல் மீடியாக்களே , அண்ணாமலை அவர்களிடம் கேட்ட கேள்விகளில் ஒரு பத்து சதவீதமாவது இவர்களை பார்த்து கேட்டு இருப்பார்களா ......

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    சபாநாயகர் அப்பாவு என்னதான் ஸ்டாலின் காவடி தூக்கி ஆடினாலும் அமைச்சர் பதவியெல்லாம் கிடைக்காது.

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்கிற உண்மையை நிரூபித்துக் காட்டுபவர்கள் நமது திராவிட அரசியல்வாதிகள். குரங்குகளே வியக்கும்படி கட்சி தாவுவதில் வல்லுநர்கள்.

  • suresh - doha,கத்தார்

    நல்ல உருட்டு

  • அப்புசாமி -

    ஜெயலலிதாவே அதிமுக வை திமுக வுடன் இணைத்து விட்டு சந்நியாசம் வாங்கிட்டு போறதா எங்கிட்டேயும், சோ கிட்டேயும் கேட்டாரு. வாணாம்னுட்டோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement