Load Image
Advertisement

கலெக்டர் ஆபீசில் இருக்கை வசதி இனி, கால் கடுக்க நிற்க வேண்டாம்!

 Collectors office seating facility, no more standing around!    கலெக்டர் ஆபீசில் இருக்கை வசதி இனி, கால் கடுக்க நிற்க வேண்டாம்!
ADVERTISEMENT
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு தேவைகளுக்காக தினம் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தரைத்தளத்தில் எவ்வித இருக்கை வசதியும் இல்லாததால், பொதுமக்கள் கால்கடுக்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையே நீடித்துவந்தது.

வாரந்தோறும் திங்கட்கிழமை குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. மனுக்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்த பின்னரே, கூட்ட அரங்கினுள் சென்று அதிகாரிகளிடம் மனுக்களை வழங்க மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பதிவு செய்த மனுக்களை பெறுவதற்காக, பொதுமக்கள் அரை மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. இருக்கை இல்லாததால், கூட்ட அரங்க போர்ட்டிகோ பகுதியிலேயே, ஆங்காங்கே தரையில் அமர்கின்றனர்.

மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம், புதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. தரைதளத்தில் இயங்கும், பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கம் முன்பு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆதார், இ-சேவை மையம், மருத்துவ காப்பீடு அலுவலகம், வாக்காளர் சேவை மையம், வங்கி, தபால் அலுவலகம் அருகே சாய்ந்து அமரும் வகையிலான, மொத்தம், 100 இரும்பு சேர்கள் போடப்பட்டுள்ளன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement