Load Image
Advertisement

மருத்துவமனையில் டூவீலர் திருட்டு: எச்சரிக்கை பலகை வைத்த போலீஸ்  

 Police put up two-wheeler theft warning sign at hospital    மருத்துவமனையில் டூவீலர் திருட்டு:  எச்சரிக்கை பலகை வைத்த போலீஸ்  
ADVERTISEMENT
திருப்பூர்;அரசு மருத்துவமனையில் அதிகளவில் வாகன திருட்டு நடப்பதால், டூவீலர்களை நன்கு பூட்டி தங்களது பொறுப்பில் பாதுகாத்துக் கொள்ள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டூவீலர், கார்கள் நிறுத்த தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஒழுங்குபடுத்த தனி பாதுகாவலர்கள் உள்ளனர். காலை, 7:00 முதல், 11:00 மணி வரை பணியில் ஈடுபடுகின்றனர்; வாகனங்களை கண்காணிக்கின்றனர்.

இருப்பினும், அவ்வப்போது பைக் திருட்டு நடக்கிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன் ஒரே நாளில், இரண்டு பைக் காணாமல் போயுள்ளது. இந்நிலையில், 'திருப்பூர் போலீசார் சார்பில்,' முக்கிய அறிவிப்பு' என பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில்,' இங்கு நிறுத்தும் இருசக்கர வாகனங்களை நன்கு பூட்டி தங்களது பொறுப்பில் பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. திருடர்கள் ஜாக்கிரதை,' என எழுதப்பட்டுள்ளது. 'அடுத்தது பைக் திருட்டு நடக்காமல் இருக்க, வாகன ஓட்டிகளை எச்சரிக்க இவ்வாறு அறிவிப்பு வைத்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement