பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதி நேர உறுப்பினரும், மியூச்சுவல் பண்டு துறையின் மூத்த தலைவருமான நிலேஷ் ஷா இதுகுறித்து மேலும் கூறியதாவது:
கடந்த 21 ஆண்டுகளில், இந்தியர்கள் தங்கம் இறக்குமதிக்காக மட்டும் கிட்டத்தட்ட 41.50 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டு உள்ளனர்.
இழப்பு
இந்த ஒரு பழக்கத்தை தவிர்த்துவிட்டால், நம் பிரதமரின் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் உள்நாட்டு உற்பத்தி அதாவது, 415 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை நீண்ட காலத்திற்கு முன்பே எட்டியிருக்க முடியும்.
நிதி முதலீடுகளில், சரியான வழிமுறைகளை பின்பற்றாததால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை நாம் இழந்திருக்கிறோம்.
நம் சுங்கத்துறை தொடர்ந்து தங்க பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இது கடத்தல் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது.
முதலீடு
துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று தங்க நகைகளுடன் திரும்பும் இந்திய பயணியர், எளிதில் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி விடுகின்றனர்.
தங்கத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, டாடா, அம்பானி, பிர்லா, வாடியா மற்றும் அதானி போன்ற தொழில் முனைவோர்களிடம் அந்த பணத்தை முதலீடு செய்திருந்தால், நம் நாட்டின் ஜி.டி.பி.,யும், தனி நபர் ஜி.டி.பி.,யும், கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் வளர்ச்சி கண்டிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த21 ஆண்டுகளில், தங்கம் இறக்குமதிக்காக மட்டும், கிட்டத்தட்ட 41.50 லட்சம் கோடி ரூபாயை இந்தியர்கள் செலவிட்டுள்ளனர்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!