Load Image
Advertisement

தொழிற்சங்கத்தினர் 28ல் ஆர்ப்பாட்டம்

 Trade unionists protest on 28    தொழிற்சங்கத்தினர் 28ல் ஆர்ப்பாட்டம்
ADVERTISEMENT
திருப்பூர்:சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்குமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டம், ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுசெயலாளர் நடராஜன் தலைமை வகித்தார்.

பனியன் சங்க பொதுசெயலாளர் சேகர், மாவட்ட பொதுசெயலாளர் ரங்கராஜன்(சி.ஐ.டி.யு.,), தொழிற்சங்க பிரதிநிதிகள், குமார் (சி.ஐ.டி.யு.,), ரங்கசாமி (எல்.பி.எப்.,), அறிவழகன் (ஐ.என்.டி.யு.சி.,), சிவசாமி (ஐ.என்.டி.யு.சி.,), மகுடபதி, முத்துசாமி (எச்.எம்.எஸ்.,), ராஜேந்திரன், சம்பத், மனோகரன் (எம்.எல்.எப்.,) உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு எதிராக, 26, 27 மற்றும் 28ம் தேதிகளில், கவர்னர் மாளிகை முன் பெருந்திரள் அமர்வு போராட்டம் நடக்கிறது.

சென்னையில் நடக்கும் போராட்டத்தில், திரளானவர் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.

திருப்பூர் குமரன் சிலை அருகே, 28ம் தேதி மாலை, 5:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement