Load Image
Advertisement

ஆராய்ச்சி மையங்களின் தலைநகராக தமிழகம் விரைவில் உருவெடுக்கும்!

 Tamil Nadu will soon emerge as the capital of research centers!    ஆராய்ச்சி மையங்களின் தலைநகராக தமிழகம் விரைவில் உருவெடுக்கும்!
ADVERTISEMENT
சென்னை:''உலகின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய தலைநகராக, தமிழகம் உருவெடுக்கும்; மின்சார வாகனங்களை எளிதில் 'சார்ஜிங்' செய்ய, அரசின் சார்பில் அதிக மையங்கள் அமைக்கப்படும்,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

தமிழக அரசு மற்றும், 'ஆட்டோகார்' நிறுவனம் இணைந்து, 'இந்திய இ.வி.கான்கிளேவ்' என்ற மின்சார வாகன துறை மாநாடு, சென்னை ஆர்.ஏ.புரத்தில் நேற்று நடந்தது. அதில் பல முன்னணி கார், இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன.

முதலிடம்

நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜா பேசியதாவது:

இந்தியாவில் தொழில் செய்ய வரும் நிறுவனங்களின், முதல் விருப்பமாக தமிழகம் உள்ளது. இதற்கு, தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் முக்கிய காரணம்.

மோட்டார் வாகனம், உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் என, அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. சென்னை, வாகன உற்பத்தியின் தலைநகராக திகழ்கிறது. நாட்டில், மின்சார வாகனங்கள் உற்பத்தியில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இதுவரை, மின்சார வாகன துறையில், 40,000 கோடி ரூபாய் முதலீட்டை, தமிழகம் ஈர்த்துள்ளது. அந்த துறையில் இன்னும் அதிக முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில், அரசு ஈடுபட்டுள்ளது.

இதனால் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

தெற்கு ஆசியாவின் அறிவுசார் தலைநகரமாக, தமிழகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தயாரிக்கப்படுவை, 169 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 'சார்ஜிங்' செய்ய சிரமம் ஏற்படும் என்று கருதி, மக்கள் மின்சார வாகனங்கள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

எளிய முறையில், எந்த இடத்திலும் சார்ஜிங் செய்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் சார்பில், அதிக எண்ணிக்கை வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.

நாட்டிலேயே, தமிழகத்தில்தான், 43 சதவீத பெண் ஊழியர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்.

தமிழகத்தில், காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்தை சேமிக்க கூடிய, 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இந்த மின்சாரம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வினியோகம் செய்யப்படும். ஹிட்டாச்சி எரிசக்தி நிறுவனம், உலகளாவிய தொழில்நுட்ப புத்தாக்க மையத்தை, சமீபத்தில் சென்னையில் துவக்கியது.

மின் வாகனம்

இதேபோல், பல நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அமைத்து வருகின்றன. விரைவில், உலகளவில், ஆராய்ச்சி மையத்தின் தலைநகராக தமிழகம் உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொழில் துறை செயலர் அருண்ராய் பேசும்போது, ''சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில், தமிழகம் வலுவான இடத்தில் உள்ளது. நாட்டில் விற்கப்படும், மின்சார இரு சக்கர வாகனங்களில், 40 சதவீதமும்; இரு சக்கர வாகனங்களில், 70 சதவீதமும் தமிழகத்தில் தயாரிக்கப்படுவை,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement