Load Image
Advertisement

கறிக்கோழி விற்பனை சரிவால் விலை குறைப்பு நடவடிக்கை

 Decline in chicken sales prompts price cuts    கறிக்கோழி விற்பனை சரிவால் விலை குறைப்பு நடவடிக்கை
ADVERTISEMENT
பல்லடம்:கறிக்கோழிகளின் விற்பனை சரிவடைந்ததை தொடர்ந்து, பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு, விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், 7,000க்கும் மேற்பட்ட பண்ணைகள் வாயிலாக, வாரம் ஒரு கோடி கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன.

பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு, கோழிகளின் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. சமீப நாட்களாக, கறிக்கோழி விற்பனை சரிந்ததால், விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஒருங்கிணைப்பு குழு செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:

சில நாட்களாக, கறிக்கோழி நுகர்வு குறைந்து வருகிறது. அய்யப்ப பக்தர்கள் விரதம் துவங்கி வருவதால், கார்த்திகை மாதம் விற்பனை குறைவது வழக்கம் தான். இம்முறை, முன்கூட்டியே விற்பனை சரிவடைந்துள்ளது.

இதனால், பண்ணைகளில் வழங்கப்பட்டு வரும் கோழிகளின் எடை அதிகரித்து வருகிறது. கூடுதல் நாட்கள் பண்ணைகளில் வைத்து கோழிகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விற்பனையை அதிகப்படுத்த வேண்டி, கொள்முதல் விலையை குறைத்து வருகிறோம். அடக்க விலை, 90 ரூபாயாக உள்ள சூழலில், கொள்முதல் விலை, 79 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'கிலோ, 79 ரூபாய்க்கு பண்ணையாளர்களிடம் இருந்து கறிக்கோழிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், சில்லரை வியாபாரிகள், 130 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள் விலையை குறைத்தால், சற்று கூடுதல் விற்பனையாக வாய்ப்பு உள்ளது. இது குறித்து விற்பனையாளர்கள்ஆலோசிக்க வேண்டும்' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement