ADVERTISEMENT
புதுடில்லி:வெளிநாட்டு நிதியுதவி சட்டங்களை மீறிய குற்றத்திற்காக, 9,300 கோடி ரூபாயை செலுத்துமாறு, ஆன்லைன் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான 'பைஜூஸ்' நிறுவனத்துக்கு, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமலாக்கத்துறையின் ஆதாரங்களின் படி, கடந்த 2011 முதல் 2023ம் ஆண்டுகளுக்கு இடையில், கிட்டத்தட்ட 28,000 கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை பைஜூஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதே காலகட்டத்தில், வெளிநாட்டு நேரடி முதலீடு என்ற பெயரில் 9,754 கோடி ரூபாயை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் செலவுகள் என்ற பெயரில் பைஜூஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 944 கோடி ரூபாயை பதிவு செய்துள்ளது.
இதையடுத்து, சட்டங்களை மீறிய குற்றத்திற்காக, பைஜூஸ் நிறுவனம் 9,362 கோடி ரூபாயை செலுத்துமாறு, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்த பைஜூஸ் நிறுவனம், அதுபோன்றதொரு நோட்டீஸ் எதையும் தாங்கள் பெறவில்லை என்றும், எந்த ஒரு அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தையும் தங்கள் நிறுவனம் மீறவில்லை என்றும் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், நோட்டீஸ் அனுப்பியதை அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!