Load Image
Advertisement

சவுதியில் மாயமான ராமநாதபுரம் மீனவர்

 Mysterious Ramanathapuram fisherman in Saudi    சவுதியில் மாயமான ராமநாதபுரம் மீனவர்
ADVERTISEMENT
ராமநாதபுரம்:'சவுதி அரேபியா நாட்டில் காணாமல் போன ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிலாளியை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்' என, அவரது மனைவி, உறவினர்கள் வலியுறுத்தினர்.

திருவாடானை தாலுகா, முள்ளிமுனையை சேர்ந்தவர் சமயகாந்த் 35. இவர் 15 ஆண்டுகளாக சவுதி அரபியா நாட்டில் ஜீபைல் என்ற பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழில் செய்தார்.

அந்நாட்டு போலீசார் சந்தேகத்தின் பேரில் சமயகாந்த்தை அழைத்து சென்றனர். அதன் பின் அவர் திரும்பி வரவில்லை என அவரது மனைவி நந்தினியிடம் சக மீனவர்கள் தெரிவித்தனர்.

நந்தினி கூறுகையில், “நவ., 9ல் சவுதியில் போலீசார் அழைத்துச் சென்ற பிறகு எனது கணவரை காணவில்லை. எதற்காக அழைத்து சென்றனர் என்ற விபரமும் தெரியவில்லை. மூன்று குழந்தைகள், மாமனார், மாமியார் உள்ளோம்.

''கணவரின் உழைப்பு மட்டும் தான் எங்களின் வாழ்வாதாரம். எனவே, கணவரை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் மனு அளித்துள்ளோம்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement