Load Image
Advertisement

உரம் தெளிப்பில் ட்ரோன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

 Drone Farmers Awareness in Fertilizer Spraying    உரம் தெளிப்பில் ட்ரோன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADVERTISEMENT
சேலம்:சேலத்தில், விவசாயிகளுக்கு 'ட்ரோன்' பயன்படுத்தி உரம் தெளிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மத்திய அரசின் சார்பில், 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' என்ற விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 15ல் பிரதமர் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சி, 60 நாட்களாக நடக்க உள்ளது.

இந்நிகழ்ச்சியில், முதல் கட்டமாக பழங்குடியினர் அதிகம் உள்ள ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டு, விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, கொளத்துார் ஆகிய ஒன்றியங்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு நிறுவனமான சென்னை உரம் நிறுவனம் சார்பில், நேற்று தாசநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டணம் அருகில் உள்ள பள்ளப்பட்டி கிராமங்களில் விவசாயிகளுக்கு, ட்ரோனை பயன்படுத்தி, நானோ யூரியா உரம் தெளிப்பது குறித்து செய்முறை விளக்கம் தரப்பட்டது.

விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர். ஜனவரி வரை பல்வேறு பகுதிகளில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement