Load Image
Advertisement

மின்சாரம் துண்டிக்கப்பட்ட விபரம் தெரிவிக்காததால் கூடுதல் கட்டணம்

சென்னை:மின் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட விபரத்தை நுகர்வோரிடம் ஊழியர்கள் தெரிவிக்காமல், கம்ப்யூட்டரில் மட்டும் பதிவு செய்து விடுகின்றனர். இதனால், கட்டணம் செலுத்த வேண்டிய தகவல் வரவில்லை என்று காத்திருக்கும் நுகர்வோர், கூடுதல் கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முதல், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கின்றனர். கணக்கெடுத்த தேதியில் இருந்து, 20 தினங்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.

அபராதம்



குறிப்பிட்ட அவகாசம்தாண்டி கட்டணம் செலுத்தாத இணைப்புகளில், மின் வினியோகம் துண்டிக்கப்படும்.

பின், அபராதத்துடன் சேர்த்து கட்டணம் செலுத்தியதும் மின்சாரம் வழங்கப்படும். வெளியூர் சென்றது, மறதி உள்ளிட்ட காரணங்களால், சிலர் மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளனர். அந்த இணைப்புகளில், ஊழியர்கள் நேரில் சென்று மின்சாரத்தை துண்டிப்பதில்லை.

அதேசமயம், அலுவலக கணினியில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது போன்று பதிவு செய்கின்றனர்.

சம்பந்தப்பட்ட நுகர்வோர், மின் பயன்பாடு கணக்கெடுக்க வரவில்லை என்று கருதியும், மின் கட்டண விபரம் தெரியாததாலும் கட்டணத்தை செலுத்துவதில்லை.

அவர்களில் பலர், 100 யூனிட் கீழ் இலவச மின்சாரம் வந்ததால் கட்டணம் வரவில்லை என்றும் நினைத்து கொள்கின்றனர்.

தொடர்ந்து, பல மாதங்களாக மின் கட்டணம் வரவில்லை என்றதும், அலுவலகத்திற்கு சென்று, ஊழியர்களிடம் கேட்கின்றனர்.

ஒரே தவணை



அவர்கள், மொத்த கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்துமாறு கூறுகின்றனர். இதனால், கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டு, பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பிரச்னை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் போன்ற ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் தான் அதிகம் நடக்கிறது.

'அவ்வப்போதுசரிபார்க்க வேண்டும்'

பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:

ஊழியர்கள், மின் பயன்பாடு கணக்கெடுக்க சரியாக வருவது கிடையாது; கணக்கெடுத்த விபரத்தையும் முறையாக தெரிவிப்பதில்லை. கட்டணம் செலுத்தாமல் இருந்தால் மின்சாரத்தை துண்டிப்பதும் இல்லை.

இதனால், இரு மாதங்களுக்கு, 500 ரூபாய் மின் கட்டணம் வரும் வீட்டிற்கு, அதைவிட அதிக நாட்கள் பயன்படுத்தியதற்கு கூடுதல் மின் பயன்பாட்டு கட்டணம், அபராதம் போன்றவை சேர்ந்து, 10,000 ரூபாய்க்கு மேல் வருகிறது. அந்த தொகையை ஒரே தவணையில் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் கட்டணத்தை நுகர்வோர் அவ்வப்போது சரிபார்த்து கொள்ள வேண்டும்; மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட விபரத்தை சம்பந்தப்பட்ட நுகர்வோரிடம் தெரிவிக்குமாறு ஊழியர்களிடம் கண்டிப்புடன் அறிவுறுத்தப்படும்' என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement