Load Image
Advertisement

மனைப்பிரிவுகளுக்கு வெளியே மழைநீர் கால்வாய் அமைப்பது யார்? மனைப்பிரிவுகளுக்கு வெளியே மழைநீர் கால்வாய் அமைப்பது யார்?

 Who constructs storm drains outside plots? Who constructs storm drains outside plots?    மனைப்பிரிவுகளுக்கு வெளியே  மழைநீர் கால்வாய் அமைப்பது யார்? மனைப்பிரிவுகளுக்கு வெளியே  மழைநீர் கால்வாய் அமைப்பது யார்?
ADVERTISEMENT
சென்னை:புதிதாக உருவாக்கப்படும் மனைப்பிரிவுகளுக்கு வெளியில் உள்ள பகுதிகளில், மழை நீர் கால்வாய் அமைப்பதற்கான பொறுப்பை, யார் ஏற்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது.

தமிழகத்தில் அங்கீகார மில்லாத மனைகள் விற்பனை சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அங்கீகாரமில்லாமல் உருவான மனைகளை வரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., ஆகியவற்றின் அங்கீகாரத்துடன், புதிய மனைப்பிரிவுகள் வருவது அதிகரித்துள்ளது.

இதில், புதிய மனைப்பிரிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள், சாலைகள், மழை நீர் வடிகால், மின்சார இணைப்புக்கான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது கட்டாயம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளே, இப்பணிகளை மேற்கொண்டன. ஆனால், தற்போது சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களே, இதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன்படி, மேம்பாட்டாளர்கள் தங்கள் மனைப்பிரிவில் மழை நீர் வடிகால் உள்ளிட்ட வசதிகளை செய்தாலும், பிரதான வழித்தடத்துடன் இணைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

அதனால், மழை காலத்தில் உரிய வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்ட மனைப்பிரிவுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது. இந்நிலையில், மனைப்பிரிவுகளுக்கு வெளியில் உரிய மழை நீர் வடிகால்களை அமைக்க, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் தயங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:

இதுபோன்ற பிரச்னைகள் குறித்து விவாதித்து ஒருமித்த முடிவு எடுக்க, பொதுப்பணி, நீர் வளம், நெடுஞ்சாலை, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் பேசி தீர்க்க வேண்டும். இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சரியான புரிதல் இல்லை



மனைப்பிரிவுகளுக்கு வெளியில் உள்ள பகுதிகளில், உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்கான தொகை, மேம்பாட்டாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. ஆனால், இத்தொகை சம்பந்தப்பட்ட துறைகளால் பயன்படுத்தப்படுவது இல்லை.

மனைப்பிரிவுகளுக்கு வெளியில் மழை நீர் கால்வாய், சாலை அமைப்பது யார் பொறுப்பு என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளுக்கிடையே, இந்த விஷயத்தில் சரியான புரிதல் இல்லை.

ஒவ்வொரு பகுதிக்கும் ஒருங்கிணைந்த முறையில், நகரமைப்பு திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம். இதனால், புதிய மனைப்பிரிவுகள் தனித்தனி தீவுகளாக மாறும் நிலைஏற்பட்டுள்ளது.

கே.எம்.சதானந்த்,

தலைவர்,

தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கம்



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement