Load Image
Advertisement

ஆலன் நகருக்கு சாலை வேண்டும்; பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

குன்னுார்;ஆலன் நகருக்கு சாலை வசதி ஏற்படுத்தி தராததை கண்டித்து, கேத்தி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது.

குன்னுார் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலன் நகரில், 70 குடும்பங்கள் உள்ளன. சாலை வசதி இல்லாததால், பள்ளி மாணவ, மாணவியர், மக்கள் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் சாலை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, வி.சி.க., சார்பில், நேற்று கேத்தி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட வி.சி.க., தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். மாணவர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

குன்னுார் தாசில்தார் கனி சுந்தரம், பேரூராட்சி தலைவர் ஹேமமாலினி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'இரண்டு மாதங்களுக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்த பின், போராட்டம் கைவிடப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement