ஊட்டியில் பிளாஸ்டிக் சோதனை; கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
ஊட்டி;ஊட்டி லோயர் பஜார் பகுதியில், தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் புழக்கத்தில் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி லோயர் பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பயன்படுத்துவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தாசில்தார் சரவணகுமார் தலைமையிலான வருவாய் துறையினர், அப்பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியது தெரியவந்தது. பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், மூன்று கடை உரிமையாளர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!