Load Image
Advertisement

மாணவர்கள் தயாரிக்கும் கைவினை பொருள் கிராம மக்களிடம் வரவேற்பு

 Handicrafts made by students are welcomed by the villagers    மாணவர்கள் தயாரிக்கும் கைவினை பொருள் கிராம மக்களிடம் வரவேற்பு
ADVERTISEMENT
குன்னுார்:குன்னுார் மானார் அரசு பள்ளியில், குழந்தைகள் கைவினை பொருட்களை தயாரித்து வருவது வரவேற்பை பெற்றது.

குன்னுார் மானார் அரசு ஊராட்சி துவக்க பள்ளியில் குரும்பா, இருளர் பழங்குடியினர், வடமாநில தொழிலாளர்களின் ஏழை குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இங்கு தலைமை ஆசிரியர் கவிதா ஒத்துழைப்புடன், உதவி ஆசிரியை வனஜா என்பவர், மாணவ, மாணவியருக்கு, 'கலையும் கைவண்ணமும்' பாடப்பிரிவில், ஒயர் கூடை, ஹான்ட் ஸ்டான்ட், பேனா ஸ்டான்ட் உள்ளிட்ட கைவினை பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளித்து வருகிறார்.

இவற்றை கற்று கொண்ட மாணவ, மாணவியர் இந்த பொருட்கள் தயாரிப்பை குடும்பத்தினருக்கும் கற்று கொடுத்தும் விற்பனையும் செய்து வருவது வரவேற்பை பெற்றுள்ளது.

ஆசிரியை வனஜா கூறுகையில், ''தற்போதைய இளைய தலைமுறையினர் மொபைல் போன் மோகத்தில் மூழ்கி வரும் நிலையில், கைவினை பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுவதால், மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது. வருங்காலத்தில் வருமானம் ஈட்டும் தொழில்கள் துவங்க வாய்ப்பாக அமையும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement