Load Image
Advertisement

நர்ஸ்கள் பணியிட மாறுதல் காலியிடங்கள் மறைப்பு?

சென்னை:தொகுப்பூதிய நர்ஸ்கள் பணியிட மாறுதல் நடந்து வரும் நிலையில், காலி பணியிடங்கள் விபரம் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தொகுப்பூதிய நர்ஸ்களுக்கு, இடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட இணை இயக்குனர் அலுவலகங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் துவங்கி இன்று வரை நடக்கும் கலந்தாய்வில், ஏற்கனவே இருந்த காலி பணியிடங்கள் விபரம் பட்டியலில் காண்பிக்கப்படாததால், நர்ஸ்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க செயலர் சுபின் கூறியதாவது:

பணியிட மாறுதலில் வெளிப்படை தன்மை இல்லை. கலந்தாய்வில் ஏற்கனவே இருந்த காலி பணியிடங்கள் விபரம் பட்டியலில் மறைக்கப்பட்டு, ஒரு சில இடங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 80 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், இரண்டு இடங்கள் மட்டுமே காட்டப்பட்டுஉள்ளன. சிவகங்கையில், 27 இடங்களில், ஆறு இடங்களும், திருவண்ணாமலையில், 45 இடங்களில் ஒன்பது இடங்களும் மட்டுமே காட்டப்பட்டுஉள்ளன. மேலும், தர்மபுரியில், 56 இடங்களில், 16 என, மாநிலம் முழுதும் இதுபோன்ற நிலை தான் உள்ளது.

மேலும், பணியிட மாறுதலுக்கு விண்ணப்பங்கள் கொடுத்த நர்ஸ்கள் பெயர், கலந்தாய்வு பட்டியலில் இடம் பெறாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement