Load Image
Advertisement

கடைக்குள் புகுந்து எண்ணெய்யை ருசித்த கரடி

 A bear entered the store and tasted the oil    கடைக்குள் புகுந்து எண்ணெய்யை ருசித்த கரடி
ADVERTISEMENT
பந்தலுார்:பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகளை உடைத்து, எண்ணெய்யை ருசித்து வரும் கரடியை பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பந்தலுார் உப்பட்டி, பெருங்கரை, அத்திக்குன்னா, கூவமூலா, நெல்லியாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த, 2 மாதங்களாக கரடிகள் உலா வருகின்றன.

இவைகள், கடைகள் மற்றும் குடியிருப்புகளின் சமையலறை கதவுகளை உடைத்து உள்ளே சென்று எண்ணெய்யை ருசித்து வருகின்றன. இப்பகுதியில் கூண்டு வைத்தும் இதுவரை சிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அத்திக்குன்னா மட்டத்துபாடி மாரியம்மன் கோவில் அருகே உள்ள கடையின் கதவை உடைத்து உள்ளே சென்ற கரடி, எண்ணெய்; மிட்டாய் ஆகியவற்றை ருசித்து சென்றுள்ளது.

தகவலறிந்த வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனக்காவலர் பிரபு மற்றும் வனக்குழுவினர் கடையில் ஆய்வு செய்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு தொடர்கிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement