ஆரம்ப சுகாதார நிலையத்தை சேதப்படுத்திய யானைகள்
கூடலுார்:கூடலுார் பார்வுட் ஆரம்ப சுகாதார நிலையத்தினுள் நுழைந்த காட்டு யானைகள், மருத்துவ பொருட்களை சேதப்படுத்தின.
கூட லுார் ஓவேலி பார்வுட் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்.,22ம் தேதி, அதனுள் நுழைந்த காட்டு யானைகள், சுகாதார நிலையத்தை சேதப்படுத்தின.
இந்நிலையில், நேற்று அதிகாலை, ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினுள், இரண்டு குட்டிகளுடன் நுழைந்த காட்டு யானை, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், குழந்தை பெட்டகங்களை சேதப்படுத்தி சென்றன. சேதமடைந்த சுகாதார நிலையத்தை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
மக்கள் கூறுகையில்,'சுகாதார நிலையத்தை இரண்டு முறை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. இதனை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்,' என்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!