Load Image
Advertisement

புகையிலை பொருள் பறிமுதல் : ஒருவர் கைது

 Seizure of tobacco products: One arrested    புகையிலை பொருள் பறிமுதல் : ஒருவர் கைது
ADVERTISEMENT
கூடலுார்:கர்நாடக மாநிலத்தில் இருந்து, ஊட்டிக்கு கடத்த முயன்ற புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

தமிழக-கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடியில், நேற்று முன்தினம் இரவு எஸ்.எஸ்.ஐ., சதீஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

கர்நாடகாவில் இருந்து வந்த காரை போலீசார் சோதனை செய்தபோது, அதில், 355 புகையிலை பொருட்களை ஊட்டிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

காருடன் அதனை பறிமுதல் செய்து, குன்னுாரை சேர்ந்த சிவா,33, என்பவரை கைது செய்தனர். மசினகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement