Load Image
Advertisement

கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 1,132 கோடி கடன் வார விழாவில் தகவல்

உடுமலை:மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, ரூ.1,132.61 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவு வார விழாவில் தெரிவிக்கப்பட்டது.

உடுமலை, குடிமங்கலத்தில், கூட்டுறவு வார விழா நடந்தது. அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் மற்றும் பலர் பங்கேற்றனர். அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், 182 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன.

நடப்பு ஆண்டில், நவ., 18 வரை, 24,713 விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.282.28 கோடி, கால்நடைகள் பராமரிப்பு கடனாக 4,132 பேருக்கு, ரூ.30.78 கோடியும், மொத்தம், 28,845 விவசாயிகளுக்கு, ரூ.313.06 கோடி மதிப்பில் வட்டியில்லாத பயிர்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையுடன், அனைத்து வகையான கடன்களும் குறைந்த வட்டி, எளிய தவணை முறையில் வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று, ரூ.100 பங்குத்தொகை, நுழைவுக்கட்டணம் ரூ.10 செலுத்தி, உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளலாம்.

நடப்பு ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, பயிர்க்கடன் 28,845 விவசாயிகளுக்கு ரூ.313.06 கோடி, நகைக் கடன்கள், 75 ஆயிரத்து, 79 பேருக்கு, ரூ.668 கோடி, மத்திய காலக் கடன்கள், 543 பேருக்கு, ரூ.5.25 கோடி, 156 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.86 லட்சம், டாப்செட்கோ கடன், 377 பேருக்கு, ரூ.272 கோடியும், டாம்கோ கடன், 120 பேருக்கு, ரூ.94 லட்சமும், 1044 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.53.88 கோடி, வீட்டுக் கடன் 301 பேருக்கு, ரூ.15.13 கோடி, சிறுகடன்கள், 1,212 நபர்களுக்கு ரூ.4.53 கோடி மற்றும் இதர கடன்கள், 2, 372 பேருக்கு, ரூ.68.24 கோடி என, கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் வாயிலாக, ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 49 பேருக்கு, ரூ.1,132.61 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டு, கூடுதலாக, ரூ.476.90 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, பேசினார்.

தொடர்ந்து, கூட்டுறவு வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement