ADVERTISEMENT
பட்டு புடவைகள் விற்பனையில், புதுமைகளை புகுத்தி வரும் திருச்சியைச் சேர்ந்த பாலாஜி:
எங்களின், 'நவநீதா சில்க்ஸ்' திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் திருச்சி - தஞ்சை சாலையில், காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. வானவில் வண்ணங்கள் போல, ஏழு தளங்களில் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.
கடந்த, 1953ல் இருந்து, லால்குடியில் ஜவுளி வணிகம் செய்யும் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவன் நான்.
நவநீதா என்ற பாரம்பரியமான எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது கிளையை, முற்றிலும் நவீனமாக திருச்சியில் பிரமாண்டமாக கட்டமைத்துள்ளேன்.
என் மனைவி மவுலினியும், ஜுவல்லரி பிசினஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர் தான். இங்கு பட்டு செக் ஷனை, ஒயிட் ஹவுஸ் போல வெண்மையாக உருவாக்கி இருக்கிறோம்.
ஷோரூமில் மஞ்சள் நிற விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும்போது, பளபளக்கும் பட்டு புடவையை கட்டிக் கொண்டு வெளியில் செல்லும்போது, அந்தத் தோற்றத்தை தராது.
அதனால், விபரமானோர் பலரும் பகல் வெளிச்சத்தில் அந்த புடவை எப்படி இருக்கும் என்று பார்க்க வெளியில் எடுத்துச் செல்வர். அதனால், பட்டு செக் ஷனையே பகல் வெளிச்சமாக மாற்றி விட்டோம்.
மக்களின் ரசனையும், தேர்வும் நிறைய மாறி விட்டதை நாங்கள் தினமும் பார்க்கிறோம். நாம் விற்பனை செய்யும் கலெக் ஷன் மட்டும் நவீனமாக இருந்தால் போதாது; அதைக் காட்டும் சூழலும் நவீனமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு வடிவமைத்தோம்.
பிரமாண்டமான கட்டடம் கட்டப்படும் போதே மக்களுக்கு, 'இங்கே என்ன வருகிறது?' என்ற ஆர்வமும் வளரத் துவங்கி விடும்.
அந்த ஆர்வத்தை மேலும் வளர்க்கும் வகையில், 'திருச்சி - தஞ்சை சாலைகள் எல்லாம் இங்கே வந்து அழகாகிறது' என்று பெரிய விளம்பர போர்டு வைத்தபோது, பலரும் ஆச்சரியத்துடன் படித்தனர். மக்கள் அப்போது முதலே இந்த நிறுவனத்தை கவனிக்க துவங்கினர்.
இந்த ஊரில் இருந்து சென்னைக்கும், காஞ்சிபுரத்திற்கும், பெங்களூருக்கும் ஏன் செல்கின்றனர்? இங்கே கிடைக்காதது அங்கே என்ன கிடைக்கிறது என்பதை தெரிந்து, அவற்றை இங்கே கொண்டு வர வேண்டும் என்று, 'பர்சேஸ் பாலிசி'யை வடிவமைத்துக் கொண்டோம்.
இன்னொரு புதுமையையும் இங்கே அறிமுகப்படுத்தி இருக்கிறோம்... அணிந்து பார்க்காமலே ஆடை பொருத்தம் பார்க்க, முதல் முறையாக, 'விர்சுவல் டிரையல் ரூம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திரையின் முன் நின்று கை அசைக்க அசைக்க, திரையில் தெரியும் ஆடைகளின் டிசைன் மாறிக் கொண்டே இருக்கும். அதிலிருந்து உங்களுக்கு பொருத்தமான டிசைன்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!