Load Image
Advertisement

பழமையான கோவில்கள் கும்பாபிேஷகம் வரும் 24ல் நடக்கிறது

உடுமலை:மடத்துக்குளம் அருகே, பழமை வாய்ந்த, தாண்டவேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் வரும், 24ம் தேதி நடக்கிறது.

மடத்துக்குளம் தாலுகா கொழுமம் சங்கராமநல்லுாரில், அமராவதி ஆற்றங்கரையில், பழமை வாய்ந்த, தாண்டவேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவில்களில், திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷகம், வரும், 24ம் தேதி நடைபெறுகிறது.

விழாவையொட்டி, சிறப்பு யாக பூஜைகள், இருகோவில்களிலும், கடந்த 19ம் தேதி காலை, 7:30 மணிக்கு, மங்கள இசையுடன் துவங்கியது.

மகா கணபதி ேஹாமம், தனபூஜை உள்ளிட்ட பூஜைகள் அன்று நடந்தது. இன்று, (22ம் தேதி), காலை, 9:00 மணிக்கு மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, அஸ்த்திர ேஹாமம், பிரசன்னாபிேஷகம் நடக்கிறது.

நாளை, (23ம் தேதி) காலை, 8:00 மணிக்கு மேல், இரண்டாம் கால யாக வேள்வி துவங்குகிறது. காலை, 9:00 மணிக்கு மேல், விமான கலசம் வைத்தல், விநாயகர் முதல் அனைத்து பரிகார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக வேள்வி, மாலை, 6:30 மணிக்கு மேல், ஸ்ரீ பிரகன்நாயகி சமேத சோழீஸ்வர சுவாமிக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

வரும், 24ம் தேதி, அதிகாலை முதல் நான்காம் கால யாகவேள்வி நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், பிரகன்நாயகி சமேத சோழீஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ தாண்டவேஸ்வர சுவாமி, வேதவள்ளி நாயகி, ஸ்ரீதேவி, பூதேவி ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாளுக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது.

மாலை, 5:00 மணிக்கு மேல், இரவு 7:00 மணிக்குள், பிரகன்நாயகி சமேத சோழீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement