Load Image
Advertisement

ரூ.85 லட்சத்தில் தன்னார்வலர்கள் பொலிவுபடுத்திய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

 The Government Primary Health Center which was beautified by volunteers at a cost of Rs.85 lakhs    ரூ.85 லட்சத்தில் தன்னார்வலர்கள் பொலிவுபடுத்திய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
ADVERTISEMENT
குன்னூர் : கொலக்கம்பை கிராமத்தில் தன்னார்வலர்கள் சார்பில் 85 லட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் பொலிவுபடுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பராமரிக்காமல் இருந்தது. தினமும் பலரும் பரிசோதனை செய்து சென்றாலும்
இப்பகுதி மக்கள் 25 கி.மீ., தொலைவில் உள்ள குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை, ஆட்டோ ஆம்புலென்ஸ் அறிமுகம் செய்து, பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற ராதிகா சாஸ்திரி, சார்லஸ் நாதன், ஜான் தெக்கனல் உட்பட தன்னார்வலர்கள், குழுவாக சேர்ந்து சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்தனர்.
இதில் 8 பொது வார்டுகள், தொழிலாளர் வார்டு, ஐ.சி.யூ., 7 படுக்கை வசதிகள், டாக்டர், சித்த பயிற்சியாளர், செவிலியர், பணியாளர் அறைகள், ஆய்வகம், மருந்தகம், கழிப்பறை, ஷவர் அறைகள், மின்கட்டுப்பாட்டு அறை அமைத்து பொலிவுபடுத்தப்பட்டது.மேலும், சிகிச்சைக்கு தேவையான நவீன கருவிகள் வைக்கப்பட்டன.

இன்று (21 ம் தேதி) சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட கலெக்டர் அருணா ஆகியோர் குத்து விளக்கேற்றி நிலையத்தை துவக்கி வைத்தனர். சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், " இந்த ஆரம்ப சுகாதார மையத்தின் மூலம் பழங்குடியினர் உட்பட 57 கிராமங்களை சேர்ந்த 75 ஆயிரம் பேர் பயனடையலாம்." என்றார். இதற்கு உதவிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
சுகாதார பணிகள் இணை இயக்குநர் பாலுச்சாமி, ஆர்.டி.ஓ., பூஷணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (5)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பொலிவு அப்படியே பராமரிக்கப்படுமா, அல்லது, மீண்டும் பொலிவு இழந்து போகுமா? பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

  • Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா

    தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கார்பொரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் இதுபோன்ற பணிகளை அவர்களே திறந்து வைப்பதுதான் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை. இதுபோன்ற பணிகளை மேலும் செய்ய ஊக்கப்படுத்தம். இந்த பணிகளை அமைச்சர் ஏன் திறந்துவைக்கவேண்டும்? விளம்பரத்திற்கு உதவுமா?

  • raja - Cotonou,பெனின்

    ஸ்டிக்கர் ஒட்டியானுவ இந்த திருட்டு திராவிடக் கூட்டம் ...

  • ranjani - san diego,யூ.எஸ்.ஏ

    இது விடியல் அரசின் சாதனை. முற்போக்கு சிந்தனையால் நடந்தது என அமைச்சர் ஏன் கூறவில்லை என்று சிந்திக்கவில்லையோ?

  • Kannan - Ramanathapuram,இந்தியா

    திமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்... ..... திமுக ஸ்டிக்கர் பாய்ஸ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்