Load Image
Advertisement

தென் மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

 Very heavy rain warning for southern districts    தென் மாவட்டங்களுக்கு  மிக கனமழை எச்சரிக்கை
ADVERTISEMENT
சென்னை:வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், இன்று மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள், அவற்றை ஒட்டிய தென்மேற்கு, -மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அந்த வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யலாம்; இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், சில இடங்களில், இடி மின்னலுடன் கனமழை பெய்யலாம்.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று மிக கனமழை

---------------------

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி

இன்று கன மழை

----------------

துாத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை

நாளை கன மழை

-----------------

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement