நில எடுப்புக்கான பூமி ராசி இணையதளம் புதுப்பிப்பு
சென்னை:நிலம் எடுப்பு பணிக்கான, 'பூமி ராசி' இணையதளத்தை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதுப்பித்துள்ளது.
நாடு முழுதும், 1.32 லட்சம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கட்டமைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உதவுவதற்காக, 'பூமி ராசி' என்ற இணையதளத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கி உள்ளது.
கடந்த 2018 முதல் இதன் வாயிலாக, 3,132 திட்டங்களுக்கு இழப்பீடாக 9,381 கோடி ரூபாய் நில உரிமையாளர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, இந்த இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, பல்வேறு புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் குறித்த சட்டப்பூர்வ நடைமுறைகள், நில உரிமையாளர்களுக்கு விரைவாக இழப்பீட்டு தொகை வழங்குவது, நில உரிமையாளர்களே தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு பட்டுவாடா நிலையை அறிந்து கொள்வது என, பல வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
நிலம் எடுப்பு தொடர்பான மத்திய அரசாணைகள், மத்திய அரசிதழ் பதிவுகள் இடம் பெற்றுள்ளன. புகார்களை பதிவு செய்து, அதன் நிலை குறித்தும் நில உரிமையாளர்கள் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!