புற்றுநோய் பரிசோதனை திட்டம் இன்று துவக்கம்
சென்னை:''தமிழகத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம், இன்று முதல் துவக்கப்பட உள்ளது,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் வகையில், 'சமுதாய புற்றுநோய் பரிசோதனைதிட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, ஈரோடு, திருப்பத்துார், ராணிப்பேட்டை, நாகர்கோவில் ஆகிய, நான்கு மாவட்டங்களில், இத்திட்டம் முதற்கட்டமாக செயல்பட உள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சி, ஈரோட்டில் இன்று நடக்கிறது.
இதன் வாயிலாக, 30 வயதுக்கு மேற்பட்ட, அறிகுறி இருப்பவர்கள், இல்லாதவர்கள் என, அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!