Load Image
Advertisement

சட்டங்களுக்கு ஹிந்தி பெயர் பார்லிமென்ட் குழு ஒப்புதல்

Parliamentary committee approves Hindi naming of laws New Delhi: There is no violation in naming the three laws to replace criminal laws in Hindi, said the Parliamentary Standing Committee on Home Affairs. New laws are being introduced to replace three laws, including the Indian Penal Code. For this    சட்டங்களுக்கு ஹிந்தி பெயர்  பார்லிமென்ட் குழு ஒப்புதல்
ADVERTISEMENT
புதுடில்லி : 'கிரிமினல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட உள்ள மூன்று சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டதில், எந்த விதிமீறலும் இல்லை' என, உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டம் உட்பட மூன்று சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இதற்கான மசோதாக்கள் லோக்சபாவில், ஆக., 11ல் தாக்கல் செய்யப்பட்டன.

இதன்படி, 1860ல் அறிமுகமான இந்திய தண்டனை சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா என்றும், 1898ல் அறிமுகமான குற்றவியல் நடைமுறைச் சட்டம், பாரதிய நாகரிக் சன்ஹிதா என்றும், 1872ல் அறிமுகமான இந்திய சாட்சிகள் சட்டம், பாரதிய சாக் ஷயா அதீனியம் என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளன.


இந்த சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் ,எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ., - எம்.பி.,யான பிரிஜ்லால் தலைமையிலான, உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு இது தொடர்பாக விசாரணை நடத்தி, தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த சட்டங்களுக்கு ஹிந்தி பெயர்கள் வைக்கப்பட்டதில் எந்த சட்ட விதிமீறல்களும் இல்லை\

சட்ட விதிமீறல்



அரசியல் சாசனத்தின், 348வது பிரிவின்படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பயன்படுத்தும் மொழியாக; சட்டங்கள், மசோதாக்கள் மற்றும் பிற சட்ட ஆவணங்களில் பயன்

படுத்தும் மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும்.
தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் அதன் பெயர்கள் ஆங்கிலத்திலேயே எழுதப்படுகின்றன; ஹிந்தியில் எழுதப்படவில்லை. இந்த சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைத்தாலும், அவை ஆங்கிலத்திலேயே எழுதப்படும். இதனால் எந்த சட்ட விதிமீறலும் இதில் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (11)

  • Sandhiya - சென்னை ,இந்தியா

    இங்கு குறிப்பிட்ட மொழியை திணிப்பது சரியாகாது.

  • Hari - chennai,இந்தியா

    சட்டங்கள் கடுமையாக இருக்கணும் மொழி ஒரு பிரச்சனையே இல்லை பழைய பெருச்சாளி வக்கீல்கள் இதை புரிந்து பணம் பண்ணுவதற்குள் அவர்களையும் உள்ள தள்ளி வாழ்நாள் சிறைக்கு கொண்டு செல்லுங்கள் .

  • அப்புசாமி -

    திணிங்கடா... இந்தியை திணிங்க. ஒரு நாளைக்கு எல்லாம்.புட்டுக்கிட்டு போகப் போகுது.

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இதை வைத்து இன்று ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் உருட்டும்.

  • ஆரூர் ரங் -

    நானறிந்த வரை அப் பெயர்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில்தான்😐 உள்ளன. அரபி, பெர்சியன் கலக்காத தூய ஹிந்தி என்றும் கொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்