Load Image
Advertisement

பாலாற்று குழாய்கள் உடைந்து சாலைகள் சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி வாகன ஓட்டிகள் கடும் அவதி

 Damage to roads due to broken water pipes: Motorists suffer greatly Motorists suffer badly    பாலாற்று குழாய்கள் உடைந்து சாலைகள் சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADVERTISEMENT
படப்பை:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், பாலாற்று குடிநீர் குழாய்கள் உடைப்பால் ஏற்பட்ட பள்ளங்களால், வாகன ஓட்டிகள் தொடர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

தாம்பரம் -- பல்லாவரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, வாலாஜாபாத் அருகே, பாலாற்றில் பழைசீவரம், வெண்குடி நீரேற்ற நிலையங்களில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.இந்த தண்ணீர் குழாயானது, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் புதைக்கப்பட்டு, ஒரகடம், செரப்பணஞ்சேரி, படப்பை வழியே தாம்பரம் செல்கிறது.

குடிநீர் வீண்



இந்த குழாய்கள் பதித்து பல ஆண்டுகள் ஆனதால், அவை பலவீனமாக உள்ளன. இதனால், இந்த குழாய்களில், தண்ணீர் அழுத்தம் காரணமாக, அவை அடிக்கடி உடைப்பு ஏற்பட்டுகிறது.

இந்த நிலையில், கடந்த ஆக., மாதம் ஒரகடம், சாலமங்கலம், ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாலைகளில் வெளியேறி வீணானது.

மேலும், சாலையின் நடுவே, ஏற்பட்ட திடீர் பள்ளதால், வாகன ஓட்டிகள் தொடர் விபத்தினை சந்தித்து வந்தனர்.

இதையடுத்து, குடிநீர் வாரியம், உடைப்பு இடங்களை கண்டறிந்து, குடிநீர் வீணாகுவதை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர்.

எதிர்பார்ப்பு



இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், குழாய் உடைப்பை சரி செய்ய தேண்டப்பட்ட பள்ளங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நாள்தோறும் விபத்துகளில் சிக்குகின்றனர்.

மேலும், 'பீக் ஹவர்' நேரங்களில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் ஏற்படும் வாகன நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்த வருகின்றனர்.

நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைக்க வேண்டி வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement