அடகு கடையில் நகை திருட்டு
திருநின்றவூர்:ஆவடி அடுத்த திருநின்றவூர், நாராயணசாமி அவென்யூவைச் சேர்ந்தவர் மயூர், 32. இவர், திருநின்றவூர் ஸ்ரீராம் நகரில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி வீட்டிற்கு சென்றார்.
வழக்கம்போல நேற்று காலை கடை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 6 சவரன் நகை மற்றும் 450 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது.
திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!