Load Image
Advertisement

காஞ்சிபுரம் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி அறிவிப்பு

காஞ்சிபுரம்:முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தடகளம், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், இறகு பந்து, கூடை பந்து, கையுந்து பந்து, கால்பந்து உள்ளிட்ட 10 விளையாட்டு போட்டிகள், நவ., 22 முதல், டிச., 7 வரை, காஞ்சிபுரம்,ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், ஆலந்துார் ஆகிய நான்கு தொகுதிகளில் நடைபெற உள்ளன.

போட்டியில் வெற்றி பெறுவோருக்கு கோப்பைகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், போட்டி நடைபெறும் நாளில், காலை 8:00 மணிக்குள் வயது சான்று, ஆதார் ஆகிய விபரங்களை, மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம்.

மேலும் தகவல்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை, 74017 03481 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement