நுங்கம்பாக்கத்தில் விதிகளை மீறிய அடுக்கு மாடி கட்டடத்துக்கு சீல்
சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி அலுவலக கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
சென்னை பெருநகரில் பல்வேறு பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. 2007க்கு பின் கட்டப்படும் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு எவ்வித தடையும் இல்லை.
இருப்பினும், சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
புகார் தெரிவிப்பவர்கள் நீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே, சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.
இந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அலுவலக வளாக பயன்பாட்டிற்கான 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.
இதில் 9, 10 தளங்களில் விதிமீறல்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இந்த பகுதிகளுக்கு சீல் வைப்பது குறித்து, கடந்த ஆக., 23ல் சி.எம்.டி.ஏ., நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு கட்டட உரிமையாளரிடம் இருந்து உரிய விளக்கம் கிடைக்கவில்லை. மேலும், பொது கட்டட விதிகளின் அடிப்படையிலும் இந்த பாகங்கள் விதிமுறைகளுக்குள் அடங்கவில்லை.
இந்த நிலையில், அந்த கட்டடத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட பகுதிகளுக்கு சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!