கண் விழித்திரை பரிசோதனை முகாம்
காஞ்சிபுரம்:உலக சர்க்கரை நோய் தினத்தை ஒட்டி, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் குமார்'ஸ் கண் சிகிச்சை மையம் சார்பில் இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன் முகாமைத் துவக்கி வைத்தார்.
மத்திய அரசின் தொற்றாநோய் தடுப்பு திட்டம் மற்றும் தமிழக அரசின் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ், இம்முகாம் நடப்பதாக வெம்பாக்கம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ்பாபு தெரிவித்தார்.
விழித்திரை வல்லுனர்கள் டாக்டர் கார்த்திக் குமார், டாக்டர் மாயா ஆகியோர் ஆண்டுதோறும் கண்விழித்திரை பரிசோதனை செய்வதன் வாயிலாக பார்வை இழப்பைத் தடுக்கலாம் என, செயற்கை கண் மாதிரிகளைக் காண்பித்து விளக்கினர்.
முகாமில் 38 பேருக்கு விழித்திரை பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்புக்குள்ளான 5 பேருக்கும், கண்புரை குறைபாடு உள்ள 10 பேருக்கும், கண்நீர் அழுத்தம் இருந்த ஒருவருக்கும், பார்வை குறைபாடு உள்ள 22 பேருக்கும் உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு, தொடர் சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!