Load Image
Advertisement

திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய் துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி

 Students suffer from the stench of the open sewers    திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய் துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி
ADVERTISEMENT
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், சாத்தான்குட்டை தெருவில், கே.வி.கே., மாநகராட்சி நடுநிலைப் பள்ளி அருகில், சாலையோரம் கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது.

இக்கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை துார்வாருவதற்காக கடந்த மாதம், கால்வாயின் மீது போடப்பட்டு இருந்த கான்கிரீட் தளம் உடைக்கப்பட்டது.

துார்வாரிய பணி முடிந்த பின்னரும், கால்வாய்க்கு தளம் அமைத்து மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. கால்வாய் திறந்து கிடப்பதால், மழையின்போது தெருவில் உள்ள மண்துகள் மற்றும் குப்பை குவியல் கால்வாய்க்குள் விழுந்து மீண்டும் துார்ந்துள்ளது.

இவ்வழியாக செல்லும் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்டவை கால்வாயில் தவறி விழுந்து விடுகின்றன.

கால்வாயில் இருந்து அடிக்கடி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதிவாசிகளும், அருகில் உள்ள கே.வி.கே., மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, திறந்து கிடக்கும் கால்வாய்க்கு கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement