திருமால்பூர் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் தேவை
திருமால்பூர்:காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் ஊராட்சியில், 5,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காய்ச்சல் மற்றும் உடல் உபாதைக்கு, 10 கி.மீ., துாரம் இருக்கும் பனப்பாக்கம் பகுதிக்கும், 5 கி.மீ., துாரம் இருக்கும் பள்ளூர், நெமிலி ஆகிய தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டி உள்ளது.
ஒரு அவசர மருத்துவசிகிச்சை பெறுவதற்கு, போதிய பேருந்து வசதி இல்லை. இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, திருமால்பூர் துணை சுகாதார நிலையத்தை, அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த தர வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!