Load Image
Advertisement

விதவை பெண் தற்கொலை முயற்சி திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது வழக்கு

 A case is filed against the man who cheated on the widow who tried to commit suicide    விதவை பெண் தற்கொலை முயற்சி திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது வழக்கு
ADVERTISEMENT
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர், ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி, 32. இவருக்கும், முனிக்குமார் என்பவருக்கும், 2008ல் திருமணம் நடந்த நிலையில், 13 மற்றும் 12 வயதில் பெண், ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் 2019ல் உடல் நலக்குறைவு காரணமாக கணவர் முனிக்குமார் உயிரிழந்தார்.

மகளிர் சுயஉதவிக் குழு தலைவியான நந்தினி அப்பகுதியில் உள்ள தனியார் கடன் வழங்கும் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்றபோது அங்கு மேலாளராக பணிபுரிந்து வந்த வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் 2022 முதல் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜூலை 7ம் தேதி திருவள்ளூரில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் திருமணம் செய்தனர். செப்., 11ம் தேதி திருவள்ளூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் வேலுாரில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு சென்ற கார்த்திக் இரு வாரத்திற்கு பின் திருவள்ளூர் வந்து நந்தினியிடம் 'என் பெற்றோர் என்னை கட்டாயப்படுத்தி பூர்ணிமா என்ற பெண்ணுடன் செப்., 17ம் தேதி திருமணம் செய்து வைத்து விட்டனர்.

'நான் அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன்' என கூறி, இரு மாதங்களாக மீண்டும் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்து உள்ளனர்.

இந்நிலையில், பூர்ணிமாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நவம்பர் 12ல் திருவள்ளூர் வந்து நந்தினியிடம் ஆபாசமாக பேசி கார்த்திக்கை அழைத்து சென்றனர்.

அப்போது, 50 சவரன் நகை வேண்டும் என்றும், கொடுத்தால் தான் நான் உன்னுடன் வாழ்வேன் என்றும் கார்த்திக், நந்தினியிடம் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினி, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்க காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விரக்தியடைந்த நந்தினி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தோர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்த திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement