Load Image
Advertisement

கூட்டுறவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம்:வேளாண் கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி, பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, கூட்டுறவு அச்சகங்கள், கூட்டுறவு ஒன்றியம் ஆகியவற்றில், காலியாக இருக்கும் இளநிலை உதவியாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன.

முறையான அறிவிப்பு, காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய அறிவிப்பு, சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த பணிக்கு கல்வி தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் டிச., 1ம் தேதி, மாலை 5:45 மணி வரையில் விண்ணப்பிக்கலாம்.

பட்ட படிப்புடன் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், நடப்பாண்டு கூட்டுறவு துறையினரால் நேரடி பயிற்சி மற்றும் அஞ்சல்வழி பயிற்சி சேர்ந்து உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக, www.drbkpm.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த விண்ணப்பதாரர்களுக்கு, டிச., 24ம் தேதி எழுத்து தேர்வு, காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

மதிப்பெண், இட ஒதுக்கீடு விபரங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, காஞ்சிபுரம்மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement