Load Image
Advertisement

கலெக்டர் அலுவலகம் அருகே மறியல்: ஏழு பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் ஊராட்சி வெண்மனம்புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் மனைவி சிவகாமி, 50.

இவரிடம் கடம்பத்துார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான ராஜேந்திரன், 49, அவரது மனைவி கவிதா, 45. ஆகியோர் கடந்த 2020ல், 6 சவரன் நகையை வாங்கியுள்ளனர். வாங்கிய நகையை திருப்பி தராமல் கடந்த மூன்றாண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர்.

இது குறித்து சிவகாமி கொடுத்த புகாரின்படி, கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

ஆனால் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருப்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சிவகாமி மற்றும் அவரது மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் கொடுக்க வந்தனர்.

ஆனால் காவல் துறையினர் இவர்களை தடுத்து நிறுத்தியதால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் ஆய்வாளர் சங்கரசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் நகர போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சந்திரா, 65, சிவகாமி, 50 அர்ச்சனா, 43, குமுதா, 42, வைஷாலி, 25 மற்றும் வினோத், 23 விக்னேஷ், 25 ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின் கைது செய்யப்பட்ட ஏழு பேரை திருவள்ளூர் நகர போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஐந்து பெண்களை சென்னை புழல் சிறையிலும் இரு ஆண்களை திருவள்ளூர் கிளைச் சிறையிலும் அடைத்தனர்.

சிவகாமியிடம் கடனாக 6 சவரன் நகையை பெற்றது தொடர்பாக கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து கடம்பத்துார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் மனைவி கவிதா, 45 என்பவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement