Load Image
Advertisement

ரயில்வே ஸ்டேஷனில் தேங்கி கிடக்கும் குப்பை துாய்மை பணியை புறக்கணித்த பணியாளர்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் தேங்கி கிடக்கும் குப்பை மற்றும்புதர் அகற்றப்படாததால், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர்.

பாலக்காடு கோட்டத்தில் உள்ள, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வழியாக, பொள்ளாச்சி - கோவை - பொள்ளாச்சி, திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்துார், கோவை - மதுரை, உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இங்குள்ள பிளாட்பார்ம், தண்டவாளம் பகுதியில் புதர்கள் அகற்றுதல் மற்றும் துாய்மை பணிகளை மேற்கொள்ள, ஐந்து தற்காலிக துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதந்தோறும், 9,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததால், துாய்மை பணியாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லாததால், பணிகளை புறக்கணித்துள்ளனர்.இதனால், பிளாட்பார்ம், தண்டவாள பகுதிகளில் குப்பை குவிந்துள்ளது. சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

குப்பைத்தொட்டிகளில் பல நாட்களாக குப்பை தேங்கியுள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், 'ஆன்லைன்' வாயிலாக ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.

ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. தற்போது, துாய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவையாக உள்ளதால், பணிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இதனால், ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் குப்பை பரவி கிடக்கின்றன. ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளும் நிறைந்து, சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுகிறது.மத்திய அரசு துாய்மை பாரத திட்டத்தை ஊக்கப்படுத்தும் நிலையில், ரயில்வே அதிகாரிகள், துாய்மை பணிகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ரயில் பயணியர் அதிகளவு வந்து செல்லும் நிலையில், நோய் பரப்புமிடமாக ரயில்வே ஸ்டேஷன் மாறாமல் இருக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement