Load Image
Advertisement

கார்த்திகை மாதம் துவங்கியதால் சந்தையில் மாடு விற்பனை மந்தம்

 Due to the beginning of the month of Karthika, the sale of cattle in the market is slow    கார்த்திகை மாதம் துவங்கியதால் சந்தையில் மாடு விற்பனை மந்தம்
ADVERTISEMENT
பொள்ளாச்சி;கார்த்திகை மாதம் துவங்கியதால், பொள்ளாச்சி மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.

பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. நேற்று கூடிய சந்தையில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. விற்பனை மந்தமாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'நேற்று மாட்டு சந்தையில், 2,500 மாடுகள் விற்பனைக்காக வந்தன. நாட்டு பசு மாடுகள், 30 -- 35 ஆயிரம் ரூபாய், எருமை, 35 -- 40; காங்கேயம் காளை, 45 -- 50; முரா, 50 -- 55; ஜெர்சி 25- - 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. கார்த்திகை மாதம் துவங்கியதால் சபரிமலைக்கு மாலை அணிந்து பக்தர்கள் விரதம் இருக்கினறனர். இதனால், மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது,' என்றனர்.

உடுமலை



வழக்கமாக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில், மீன், மட்டன், சிக்கன் போன்றவற்றை அசைவ பிரியர்கள் விரும்பி வாங்குவர்.

ஆனால், கார்த்திகை மாத பிறப்பு, சபரிமலை சீசன் துவக்கம், சுபமுகூர்த்தம், கந்தசஷ்டி விழா வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் பலரும் அசைவம் தவிர்த்தனர்.

இதனால், உடுமலை பகுதியிலுள்ள இறைச்சிக்கடைகளில் மீன் விற்பனை மந்தமாக நடந்தது. இது போன்று மட்டன், சிக்கன் உள்ளிட்ட இறைச்சி விற்பனையும் குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement