நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்
உடுமலை:உடுமலையில், கோட்டஅளவிலான விவசாயிகள்குறை தீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிற்குட்பட்ட, உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை (23ம் தேதி), காலை, 11:00 மணிக்கு, கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்குமாறு, கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்துள்ளார்.
உடுமலை வட்டாரத்தில், பாசன நீர் பற்றாக்குறை, மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல், மழை பொழிவு இல்லாததால் மானாவாரி பயிர் சாகுபடி பிரச்னை, கொப்பரை கொள்முதல் என, பல்வேறு பிரச்னைகளை கூட்டத்தில் விவாதிக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!