காட்டுமாடு தாக்கி கோவில் பூஜாரி பலி
வால்பாறை:வால்பாறை அருகே, காட்டு மாடு தாக்கியதில் கோவில் பூஜாரி பரிதாபமாக இறந்தார்.
வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா (டான்டீ) தேயிலை எஸ்டேட். இங்குள்ள ரயான் டிவிஷன் (7ம் பிரட்டு) தேயிலை எஸ்டேட்டில், தொழிலாளியாக வேலை செய்து வருபவர் சரஸ்வதி. இவரது கணவர் செல்லப்பன், 65. இவர் இங்குள்ள மாரியம்மன் கோவிலில் பூஜாரியாக உள்ளார்.
நேற்று மாலை, பூஜாரி செல்லப்பன் கோவிலில் இருந்து வீடு திரும்பிய போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த காட்டு மாடு அவரை தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து, போலீஸ், வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!