ADVERTISEMENT
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முத்தமிழ் தேரை, பொதுமக்கள் பார்த்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பன்முக தன்மையை விளக்கும் வகையில், முத்தமிழ் தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகிறது. நேற்று பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, பேனா வடிவிலான முத்தமிழ் தேர் வந்தது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் (பொ) சுரேஷ், தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் நகராட்சி அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தேரை பார்வையிட்டனர்.
தேருக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது தாயாரின் சிலைகள், புத்தகங்கள் இடம் பெற்று இருந்தன.
இதை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட்டனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!