கள்ளக்காதலால் விபரீதம்; தற்கொலைக்கு முயன்ற பெண்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, மின் ஊழியர் திருமணம் செய்ய மறுத்ததால், இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, வடக்கிபாளையத்தை சேர்ந்த, 25வயது இளம்பெண்ணுக்கு, திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றும், 29 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த பெண், சாணிப்பவுடர் கரைசல் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அருகிலுள்ள வீட்டில் இருந்தவர்கள், பெண்ணை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!