Load Image
Advertisement

துங்காவியில் நிரந்தர குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் போராட திரண்டதால் பரபரப்பு

உடுமலை:குடிநீர் தட்டுப்பாட்டை கண்டுகொள்ளாத குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளைக்கண்டித்து, துங்காவியில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

மடத்துக்குளம் ஒன்றியம், துங்காவி ஊராட்சிக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட, கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இத்திட்டத்தில், துங்காவி, நீருந்து நிலையத்தில் இருந்து, துங்காவி, மலையாண்டிபட்டணம், சீலநாயக்கன்பட்டி, பெங்களூர், குமாரபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக துங்காவி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு போதிய குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.

இது குறித்து ஊராட்சி நிர்வாகம், தரப்பில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட கிராம மக்கள், நேற்று மாலை, துங்காவியில், சாலை மறியல் போராட்டத்தில், ஈடுபட முயன்றனர். தகவல் கிடைத்ததும், கணியூர் போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நீருந்து நிலையத்தில், மோட்டார் பழுது காரணமாக, வினியோகம் பாதித்துள்ளதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நாட்களாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தற்காலிக தீர்வாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மோட்டார் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் கூறியதாவது: கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பற்றாக்குறையாகவே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது குறித்து ஊராட்சி, ஒன்றிய நிர்வாகம் வாயிலாக குடிநீர் வடிகால் வாரியத்திடம் பல முறை புகார் தெரிவித்தும், அலட்சியமாக உள்ளனர்.

குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமப்படுகிறோம். இதே நிலை நீடித்தால், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டத்தில், ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர். குடிநீர் தட்டுப்பாட்டைக்கண்டித்து, மக்கள் போராட்டத்தில், ஈடுபட முயன்றதால், துங்காவியில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement