அரசு பஸ் ஊழியர்களை தாக்கியவர்கள் கைது
உடுமலை:உடுமலை அரசு போக்குவரத்துக்கழகம், 33ம் எண் வழித்தடத்தில், பருத்தியூர் செல்லும், பஸ்சில் டிரைவராக, பிரபாகரன், 44, கண்டக்டராக, குமார், 44, பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை, பருத்தியூரிலிருந்து, உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சில், தேவனுார்புதுார் பஸ் ஸ்டாப்பில், கரட்டுமடத்தில் குடியிருந்து, கூலி வேலைக்கு சென்று வந்த, திண்டுக்கல் தாடிக்கொம்பைச்சேர்ந்த ஆனந்தன், 22, மது போதையில் ஏறி, படியில் நின்று தகராறு செய்துள்ளார். டிரைவர், கண்டக்டர் மற்றும் பொதுமக்கள், அவரை சின்னபுதுார் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தன், தனது நண்பர்கள், கோட்டூர் அங்கலக்குறிச்சியைச்சேர்ந்த மகேந்திர பிரசாத், 19, ரஞ்சித், 20, ஆகியோர் பைக்கில் துரத்தி வந்து, புங்கமுத்துார் அருகே பஸ்சை வழிமறித்து, டிரைவர், கண்டக்டரை தாக்கியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த அரசு பஸ் ஊழியர்கள் இருவரும், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரையும் தாக்கிய, மூன்று பேரை தளி போலீசார் கைது செய்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!