Load Image
Advertisement

பழ வகை செடி தொகுப்பு மானிய விலையில் வழங்கல்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராம மக்கள், பழ செடி வகைகள் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவுக்கு உட்பட்ட, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், ஏழு ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு, ஐந்து வகை பழ செடிகளான, மா, நெல்லி, எலுமிச்சை, பப்பாளி மற்றும் மாதுளை தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

ஒரு ஊராட்சிக்கு, 300 தொகுப்புகள் என, ஏழு ஊராட்சிகளுக்கும் செடிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்புகள் அனைத்தும் அந்தந்த ஊராட்சி அருகில் உள்ள தோட்டம் மற்றும் காடுகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு வழங்கப்படுகிறது. 200 ரூபாய் மதிப்புள்ள செடிகள்,மானியத்தில் 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த ஏழு ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் இந்த தொகுப்பை பெற, அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலோ அல்லது தோட்டக்கலை துறை அலுவலகத்திலோ தங்களின் ஆதார் கார்டு நகல் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒப்படைத்து பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement