Load Image
Advertisement

படகு இல்லத்தில் கழிவு நீர் தேங்குது! சுத்தகரிப்பு செய்வது என்னாச்சு

 Sewage is accumulating in the boat house! What is purification?    படகு இல்லத்தில் கழிவு நீர் தேங்குது! சுத்தகரிப்பு செய்வது என்னாச்சு
ADVERTISEMENT
வால்பாறை:வால்பாறை நகரில், சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், நகராட்சி சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, 4.5 ஏக்கரில், 4.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கப்பட்டது.

பணி முற்றிலுமாக நிறைவடையாத நிலையில், கடந்த, 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அவசரகதியில் படகுஇல்லம் திறக்கப்பட்டது. ஆனாலும், சுற்றுலா பயணியர் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த மே மாதம் நடந்த கோடை விழாவின் போது, படகுசவாரி முதன் முறையாக துவங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், வால்பாறை நகரில் வீடுகளில் வெளியாகும் கழிவு நீர், நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள படகு இல்லத்தில் கலக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்கும் வகையில், படகு இல்லத்திற்கு வரும் தண்ணீரை சுத்தகரிப்பு செய்ய வேண்டும். அதன்பின், படகு இல்லத்தில் தேக்க வேண்டும். இதற்காக, நகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு திட்டமிட்டது. ஆனால் இந்த திட்டம் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணியர் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும், படகு இல்லத்தில் கலக்கிறது. இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். படகு இல்லத்தில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். படகு இல்லத்தில், சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் நிம்மதியான முறையில் படகு சவாரி செய்ய வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement